Posts

நீதிக்கட்சி ஆட்சி சாதனைகள்

Image
வரலாற்று திரிபுவாதி பெ . மணியரசன் அரசியல் வரலாற்றை தனக்கு ஏற்றவாறு சாதகமாக நறுக்கி வெட்டி ஒட்டுவதில் பிதாமகன் பெ . மணியரசன்   பெரியாரின் இட ஒதுக்கீட்டு பங்களிப்பு குறித்து தமிழர் கண்ணோட்டத்தில் ஒரு கட்டுரையில் மணியரசன் எழுதி இருக்கும் சில பொய்களுக்கு மறுப்பு , அந்த கட்டுரையில் முழுக்க முழுக்க தந்தை பெரியாரை சிறுமைப்படுத்த மணியரசன் பல பல பொய்களை கூறி இருக்கிறார் அதை என்னால் முடிந்த வரை இதில் உடைத்து இருக்கிறேன்   பெரியார் 1919 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்றும் திராவிடத்தின் பிதாமகன் பெரியார் பார்பனிய பணியா கட்சியான காங்கிரஸ் கட்சியில் தானே சேர்ந்தார் என்கிறார் தோழர் பெ . மணியரசன் அது தவறு என்பது நம் கருத்து   பெ . மணியரசன் இளம் வயதில் திமுகவில் இருந்தார் பிறகு அவர் கம்யூனிஸ்ட் & மார்க்சியவாதியானார் இன்று அவர் தமிழ்தேசியவாதியாக அறியப்படுகிறார் , இருந்தாலும் காலம் பல மாறுதலான அரசியல் திசை நோக்கி இழுக்கும் அதில் இவரும் விதிவிலக்கு அல்ல தந்தை பெரியாரும் விதிவிலக்கு அல்ல   அந்த