காமராஜர் ஆட்சியும் பெரியாரும்
காங்கிரசை ஒழிப்பேன் என்று சூளுரைத்து காங்கிரஸ் மாநாட்டிலிருந்து வெளியேறிய பெரியார் தான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காமராஜரை கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்தார், அவரை தேர்தல் பரப்புரையில் காமராஜரை ஆதரித்து முதன் முதலில் பச்சை தமிழர் காமராஜர் என்று கூறி மக்களே அவருக்கு வாக்கு செலுத்துங்க என்றார் பெரியார்
இப்போது பலருக்கும் இந்த எழும் காமராஜரை ஏன் நீங்க ஆதரித்தீர்கள் ? ஏன் காங்கிரஸ் கட்சியை ஒழிப்பேன் என்று சபதம் போட்டு விட்டு மீண்டும் ஆதரித்தீர்கள் ? என்று ஆகவே அதற்கும் நானே பதில் சொல்கிறேன் என்று கூறி விளக்கம் ஒன்றையும் கூறுகிறார் பெரியார்
நான் மாறி மாறி முடிவு எடுத்திருக்கலாம் வெவ்வேறு கட்சிகளை கூட ஆதரித்திருக்கலாம் அது எல்லாமே மிகுதியான மக்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு நன்மை செய்வதற்கு மட்டுமே அது இருந்திருக்குமே யல்லாது என்னுடைய சுய நலத்திற்கல்ல மக்கள் நலத்திற்கு மட்டுமே இது தான் அவர் கொடுத்த விளக்கம்
காங்கிரஸ் கட்சியை அவர் ஆதரித்தார் காமராஜர் ஆட்சியின் சாதனைகள் என்று விடுதலை ஏட்டில் பெட்டி செய்திகளையும் வெளியிட்டு வந்தார் ஆக அவர் எண்ணமும் செயலும் தமிழர்களுக்கானது இதுவே பெரியாரின் காமராஜர் காங்கிரஸ் ஆதரவு ஏன் என்பதற்க்கான எளிமையான ஒரு புரிதல்
#தந்தை_பெரியார்

Comments
Post a Comment