எல்லை போராட்டமும் பெரியாரும்
தமிழ் நாடு எல்லை போராட்டமும் பெரியாரின் நிபந்தனையும் தமிழ்நாடு அறிவிப்பும் ம.பொ.சி யின் பல்டியும் • தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் முதன் முதலில் போராடிய தலைவர் மார்ஷல் நேசமணி தான் ம.பொ.சி அல்ல பின்னாளில் ம.பொ.சி தன்னை அதில் இணைத்து கொண்டார் • ம.பொ.சி பெரியாரை சந்தித்து எல்லை போரட்டத்திற்கு ஆதரவு கேட்டார் ஒரு அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டத்துக்கு பெரியாரையும் அழைத்து கலந்துக்க கேட்டு கொண்டார் • பெரியார் ஐந்து நிபந்தனைகள் சொல்ல ம.பொ.சி அதை ஏற்று கொண்டால், தன் திராவிடர் கழகம் எல்லை பிரச்சினையில் அவருடன் முழு வலிமையோடு கலந்து எதிர்ப்பு போரில் ஈடுபடும் என்றார் • ஆனால் ம.பொ.சி அதில் ஒப்பு கொள்ள மறுத்து விட்டார் பின்னர் பெரியார் தான் கூட்டத்திற்கு வராதது போல குற்றமும் சுமத்திய போது 29.1-1956 வேலூரில் பெரியார் தனக்கும் சிவஞானத்துக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளின் விவரத்தை வெளியிட்டார் • தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை பெரியார் ஆதரித்தார் அதை விட நமக்கு பேராபத்து, தட்சிணப் பிரதேசம் உருவ...