எல்லை போராட்டமும் பெரியாரியாரும்
எல்லை போராட்டமும் பெரியாரின் தனி தமிழ்நாடு அறிவிப்பும் தட்சிணப்பிரதேசம் என்ற அறிவிப்பில் இருந்து துவங்குகிறது அதில் பெரியார் செய்த பணிகளை சிலர் மறைத்தும் குறை கூறியும் வருகின்றனர்
• இதே பெய்யர்கள் தான் எங்கே பெரியார் எல்லாம் போராடவில்லை என்றார்கள் பின் பெரியார் ஐந்து நிபந்தனை விதித்தார் என்றார்கள் ஆம் 5 முக்கிய சிக்கல்கள்
கடைசியில் பெரியார் சென்றார் என்றால் அதுக்கு சான்று கொடு என்றார்கள் ஆக இவர்கள் நோக்கம் போரட்டத்தில் கலந்த பெரியாரின் நடவடிக்கைகளை தங்களுக்கு வேண்டியது போல திரிப்பது மட்டுமே ஆகும்
(1953 ஆந்திர பிரிவினையை தொடர்ந்து மற்ற மாநிலங்கள் மொழிவாரி மாநில உரிமை கேட்க தொடங்கி விடுவார்கள் என்று பயந்து தட்சின பிரதேசம் என்ற ஒன்றை இந்திய அரசு திணித்தது)
1:- அதை பெரியார் எதிர்த்தார் மொழிவாரி மாநிலமாக பிரிப்பதால் தான் கேட்ட திராவிட நாட்டிற்கான வலிமை குறையும் என்று நம்பினார் அதே போல் தமிழக பகுதிகள் நம்மை விட்டு சென்றாலும் அது போக மீதம் இருக்கும் பகுதிகளை இணைந்து நாம் தனி தமிழ் நாடு அமைத்து கொள்ளலாம் என்று அதில் உறுதியாக இருந்தார் அதனாலே ஆரம்பத்தில் இருந்தே தட்சிணப்பிரதேசத்தை எதிர்த்தார்
2:- எங்கு நாட்டை பிரித்து கொடுக்க வேண்டிய சூழல் வந்து விடுமோ என்று அஞ்சிய இந்திய அரசு மொழிவாரி மாநில பிரிவினையை தூண்டி விட்டது
3:- தட்சிணப்பிரதேசம் வந்தால் தமிழராகிய நமக்குத்தான் ஆபத்து தமிழ் கன்னடம் மலையாளம் மூன்று நாடுகளும் ஒன்று சேர்ந்தால், பார்ப்பனருக்குப் போக மிகுதி, உத்தியோகமெல்லாம் மலையாளி கன்னடியர் கைக்குப் போய்விடும் நமக்கு கக்கூஸ் எடுத்தல் போலீஸ் கான்ஸ்டபிள் ரயில்வே கூலி போர்ட்டர்உத்தியோகம் மிச்சமாகும் இப்போதே அவர்கள் நம்மை அடிமைபோல் நடத்துகிறார்கள்
4:- தட்சிணப் பிரதேசம் என்று சொல்லிக்கொண்டு அன்னியா் தான் ஆதிக்கம் செலுத்தி வருவார்கள் ஆந்திரா பிரிந்ததே நல்லது இனி மலையாளியும், கன்னடியரும் ஆளுக்கொரு ஜில்லாதானே? இவர்களும் போகட்டும் மீதி 12 ஜில்லாக்களைக் கொண்ட தமிழ்நாடு தனி சுதந்திர நாடாகி நமது தேய சுதந்திர முயற்கெளுக்கு எதிர்ப்பு இருக்காது என்று நம்பினேன்
5- ஆனால் இப்போது இதற்கும் தமிழ்நாடு என்று பெயர் தராமல் சென்னை ராஜ்யம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் இது சகிக்க முடியாத அக்கிரமம் அவமானம் இதை திருந்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்
6- இப்படி பெரியார் ஆரம்பத்திலே எதிர்த்த தட்சிணப்பிரதேசத்திற்கு ஆதரவாக இருந்தவர்கள் சி.சுப்பிரமணியம் நேரு ராஜாஜி பார்ப்பனர்கள் பத்திரிகைகள் காமரஜர் கருத்து கூறாமல் மொளனமாக இருந்தார்
7- காமராசர் சும்மாபிருப்பது ஆபத்தென நமக்கு தோன்றுகிறது தட்சிணப்பிரதேசம் என்ற இக்கேட்டினை முளையிலேயே கிள்ளும்படியாக எல்லாத் தமிழ் மக்களையும் வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன் என்றாஎ பெரியார் தமிழ் நாட்டில் பெரிய பதவிகளில் கட்டாயம் தமிழர்களையே நியமிக்குமாறு மந்திரிமார்களை பெரியார் கேட்டுக் கொண்டார்
8- 1953 பொட்டி ராமுலு பட்டினி போராட்டம் செய்து மரணமடைந்தார் ஆந்திர மாநிலம் பிரிந்தபோது சென்னையை மீட்க பார்ப்பனர்கள் போராட்டம் செய்து தக்க வைக்கட்டும் என்று சொல்லி சென்னை போனாலும் மீதம் இருக்கும் பகுதியை நான் தனி நாடாக ஆக்க செய்து விட முடியும் என்றார் இருந்தாலும் சென்னை மீட்புற்காக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்
(சான்று :- ம.பொ.சி எனது போராட்டம் நூல்)
(16-03-1953) சென்னை கடற்க்கரை கூட்டம்
9 - தமிழ் மக்களுக்கு எல்லை போரட்டம் மட்டும் முக்கியமில்லை இன்னும் சில போரட்டங்களும் முக்கியம் என்று தன்னை சந்தித்து எல்லை போரட்டத்திற்கு ஆதரவு கேட்ட ம.பொ.சி யிடம் 5 கோரிக்கை நிபந்தனைகளை வைத்திருந்தார்
10 - ம.பொ.சி 5 கோரிக்கையில் 3 மட்டும் தான் ஏற்றுக் கொண்டார் இராஜாஜி அழைப்பின் பேரில் ம.பொ.சி சென்னை கூட்டத்திற்கு பெரியாரை அழைத்தார் பெரியாரும் மீனாம்பாள் சிவராஜ் முத்தையா முதலியார் பக்தவசலம் ஆகியோர் கலந்து கொண்டனர்
#தமிழகஎல்லைப்போரட்டம்

Comments
Post a Comment