எல்லை போராட்டமும் பெரியாரும்
தமிழ் நாடு
எல்லை போராட்டமும் பெரியாரின் நிபந்தனையும் தமிழ்நாடு அறிவிப்பும் ம.பொ.சி யின் பல்டியும்
• தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் முதன் முதலில் போராடிய தலைவர் மார்ஷல் நேசமணி தான் ம.பொ.சி அல்ல பின்னாளில் ம.பொ.சி தன்னை அதில் இணைத்து கொண்டார்
• ம.பொ.சி பெரியாரை சந்தித்து எல்லை போரட்டத்திற்கு ஆதரவு கேட்டார் ஒரு அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டத்துக்கு பெரியாரையும் அழைத்து கலந்துக்க கேட்டு கொண்டார்
• பெரியார் ஐந்து நிபந்தனைகள் சொல்ல ம.பொ.சி அதை ஏற்று கொண்டால், தன் திராவிடர் கழகம் எல்லை பிரச்சினையில் அவருடன் முழு வலிமையோடு கலந்து எதிர்ப்பு போரில் ஈடுபடும் என்றார்
• ஆனால் ம.பொ.சி அதில் ஒப்பு கொள்ள மறுத்து விட்டார் பின்னர் பெரியார் தான் கூட்டத்திற்கு வராதது போல குற்றமும் சுமத்திய போது 29.1-1956 வேலூரில் பெரியார் தனக்கும் சிவஞானத்துக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளின் விவரத்தை வெளியிட்டார்
• தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை பெரியார் ஆதரித்தார் அதை விட நமக்கு பேராபத்து, தட்சிணப் பிரதேசம் உருவாக்கும் முயற்சி என்பதை பெரியார் எடுத்துக்காட்டி எச்சரித்தார் தன்னை சந்தித்த ம.பொ.சியிடம் பெரியார்
5 கோரிக்கைகளையும் முன் வைத்து நாம் போராட வேண்டும் என கூறுகிறார் அவை
1. தமிழக எல்லைப் போராட்டம்
2. இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு
3. மாநிலங்களுக்கு முழு அதிகாரம்
4. சென்னை ராஜ்யம் என்ற பெயர்
“தமிழ்நாடு” என்று பெயர் மாற்றம்
5. தென் மண்டலம் (தட்சிணப் பிரதேசம்) அமைப்பதற்கு எதிர்ப்பு
முதலில் இதனை ஏற்ற கொண்ட ம.பொ.சி சென்னை சென்றதும் பெரியாருக்கு எழுதிய முதல் கடிதத்திலேயே பெரியார் வைத்த 5 கோரிக்கையில்
1. தமிழக எல்லைப் போராட்டம்
2. தமிழகம் என்ற பெயர் மாற்றம்
3. இந்தித் திணிப்பை எதிர்ப்பது
• இந்த 3 கோரிக்கைகளை மட்டும் ஏற்றுக்கொள்வதாக கூறுகிறார் அவர் கைவிட்ட அந்த இரண்டு கோரிக்கைகளும் முக்கியமாக புரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும், அதிலும், சென்னை ராஜ்யம் என்ற பெயரை “தமிழ்நாடு” என்று பெயர் மாற்றும் கோரிக்கையை கூட புறந்தள்ளி விட்டு எல்லைப் போராட்டம் என்று மட்டும் சுருங்கி கொண்டார் ம.பொ.சி
• பெரியாருக்கு எழுதிய பதில் கடிதத்திலும் கவனமாக தமிழ்நாடு என்ற சொல்லை கூட “தமிழகம்” என்று குறிப்பிட்டார் ம.பொ.சி
பெரியாரின் நிபந்தனை ஒன்றிய அரசை எதிர்ப்பது ஆனால் ம.பொ.சி தட்சிண பிரதேசத்தை இராஜாஜி ஆதரிக்கிற காரணத்தால் ஆதரித்தார் பல்டி அடித்தார்
#எல்லைப்போராட்டம்


Comments
Post a Comment