தமிழ் எழுத்து சீர்திருத்தம் பெரியார்


பெரியார் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம். தமிழ்நாடு அரசு ஆணை. பொது (செய்தி, மக்கள் -தொடர்புத்துறை)

செய்தி வெளியீடு எண் -449. 

நாள் 19.10.1978

பெரியார் ஈ.வெ. இராமசாமி அவர்கள் மேற்கொண்ட தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைத் தமிழக அரசு ஏற்று, அதனை நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பித்துள்ளது.

(அரசாணை நிலை எண் 1875 19-10-1978)


“தாய் பகை குட்டி உறவு”


தாயுடன் பகையாம் ஆனால் குட்டியுடன் உறவாம் மானங்கெட்ட பெ.மணியரசன் கூறுகிறார் குடிஅரசில் எழுத்து சீர்திருத்தம் கொண்டு வந்தது குத்தூசி குருசாமி என்ற ஒரு பட்டுக்கோட்டை தமிழனாம்  

நாக்பூர் ஊதுகுழல் தமிழ் இந்து பெ.மணியரசன் உளறல் இது 

பெரியார் இல்லாமல் குத்தூசி இல்லை தஞ்சையில் பெரியார் பேச்சை கேட்டு  விட்டு நாத்திக சுயமரியாதை கொள்கையில் பெரியாருடன் கலந்து ஒரு இளைஞனாக அவர் பெரியாரை சந்தித்தார் 

நீ நன்றாக படித்திருக்கிறாய் என்ன வேலை செய்கிறாய் ?? நான் வேலை தருகிறேன் சரி வா என்னுடன் ஈரோட்டுக்கு வந்து விடு என்று அவரை அழைத்து வந்து குடிஅரசில் தன்னுடன் ஒரு ஆசிரியராக அமர்த்திக் கொள்கிறார் பெரியார் அன்று முதல் குருசாமி பெரியாரின் குடும்பத்தில் ஒருவர் 



“குஞ்சிதம் குருசாமி அம்மாளும் அவர்களது பிள்ளைகளையுன் தன் பிள்ளை போல வளர்த்தவர் பெரியாரின் மனைவி நாகம்மையார் ஆவார்”    


பெரியார் இல்லாவிடின் “குடிஅரசு” “விடுதலை” “பகுத்தறிவு” “உண்மை” “ரிவோல்ட்” என்ற இதழ்கள் எல்லாம் ஏது?  


எழுத்து சீர்திருத்தம் என்பதை வீரமாமுனிவர் தொடங்கி பலர் பெரியார் காலம் வரை முன்னெடுத்தனர் அதில் குருசாமியும் ஒருவர் பலரது கருத்துகளை மேற்கோள் காட்டி பெரியாரும் சில மாறுதல்களை செய்தார் 


அதன் பின்னர் பெரியாரே பகுத்தறிவு இதழில் ஒரு பொது அறிவிப்பை செய்து தன்னுடைய குடிஅரசிலும் விடுதலையிலும் அதை தொடர செய்தார் அதையே அரசும் சட்டமாக்கியது என்பதே இதன் உண்மை ..

Comments

Popular posts from this blog

நீதிக்கட்சி ஆட்சி சாதனைகள்

ஆதித்தனின் அழிவு மனப்பான்மை

வே.ஆணைமுத்து அவர்களின் விமர்சன புத்தகம்