நாடார்கள் கோவில் நுழைவும் தந்தை பெரியாரும்
தென் தமிழக கோவில்களில் நாடார்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட போது நாடார்களுக்கு அனுமதியில்லை என்றால் வேறெந்த சாதியும் கோவிலுக்குள் செல்ல கூடாது என்று அறிவித்தார் பெரியார் வட தமிழக கோவில்களுக்குள் நாடார்கள் செல்லலாம் ஏன் தென் தமிழக கோவில்களுக்குள் அவர்கள் செல்ல முடியாது ? என்று கேள்வி எழுப்பி ஆலய நுழைவு போரட்டத்தை முடுக்கினார் பெரியார்
மேலும் ஏன் நாடார் சகோதரர்கள் பாதம் பட்டவுடன் சாமி மறைந்து விடுமா அல்லது சாமிக்கு சக்தி போய் விடுமா ? அப்படி சக்தியற்ற அந்த கல்லை தொழுவதால் யாருக்கு என்ன பிரயோஜனம் ? என்று கேட்டார்
இவ்வாறு நாடார்களை ஆதரிக்கும் விதமாக பட்டியலின மக்களுக்கு அனுமதி வரும் வரை நாடார்கள் காத்திருக்க தேவையில்லை என்று அறிவித்தார் கோவில் நுழைவு போராட்டத்தில் நாடார்களை தான் அவர் பெருமளவு ஈடுபடுத்தினார்
தக்கலை மார்த்தாண்டம் போன்று நாடார்கள் வாழும் பகுதிகளிலும் கோவில் நுழைவை மேற்கொண்டார் வைக்கம் போராட்ட வெற்றிக்கு பிறகு சுசீந்திரம் ஆலய நுழைவு போராட்டத்துக்கான பிரச்சாரத்தில் தோழர் ஜீவாவுடன் ஈடுபட்டார் மேலும்
பெரியாரின் பணியை நாடார் குல மித்ரன் நாளிதழ் “நம் தேசத்தில் துவேசமின்மை ஒருவருக்கொருவர் பரஸ்பர நன்னம்பிக்கை ஒற்றுமை சகித்தல் அகிம்சை முதலியவை வெற்றிபெற்ற சுயராஜ்யம் தான் உண்மையான விடுதலை என்ற கொள்கையுடையவர் பெரியார் எங்களுக்குள் சாதி மத சண்டை மற்றும் வகுப்பு வித்தியாசம்
எவ்வளவு இருந்தாலும் பரவாயில்லை சுயராஜ்யம் (விடுதலை ) கொடுத்தால் போதும் என்ற கொள்கை கொண்ட நபர்களுக்கு இவர் (பெரியார்) பரம எதிரியாவர் தீண்டாமையை காலின் கீழே போட்டு மிதிப்பவர் என்று கூறி பாராட்டியுள்ளது ✊🏿



Comments
Post a Comment