கி.ஆ.பெ விசுவநாதம் திருமனம்
பெண்களுக்கு தனது கணவனை தேர்ந்தெடுக்கும் உரிமை கிடைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அந்த உரிமை கிடைக்கும் வரை திருமணத்தை தடை செய்ய வேண்டும் -பெரியார் .
இது தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டில் ஒரு திருமணத்திற்கு தலைமை தாங்கி பேசும் போது பெரியார் பேசியது. இதன் தலைப்பு அப்படி கொடுக்கப்பட்டிருக்கிறது . ஆனால் பெரியார் பேசியது என்னவென்றால் சுயமரியாதை திருமணத்திற்கு அனுமதி தராத அரசுகள் இருந்த காலத்தில் இருந்து இன்று சுயமரியாதை திருமணத்திற்கு அனுமதி அளிக்கும் காலம் வந்துள்ளது, இது மிகப்பெரிய மாற்றம். பெண்களுடைய அடிமைத் தனம் ஒழிய வேண்டும். ஆணுக்கு அடங்கி ஒடுங்கி நடக்கும் போக்கு ஒழிய வேண்டும்.
பெண்கள் ஆண்களுக்கு நிகராக தங்களது கணவனை தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற வேண்டும். அப்படி பெண்கள் முன் வரத் தயங்குவார்களானால் ஒரு நல்ல அரசாங்கமாக இருந்தால் அந்த சுதந்திரம் கிடைக்கும் வரை திருமணம் சட்டப்படி குற்றமாக்க வேண்டும் என்று கூறினார். இதில் என்ன தவறு உள்ளது.
ஆணாதிக்கவாதிகளுக்கு, பிற்போக்குவாதிகளுக்கு மட்டும் தான் இந்த பேச்சு எரியச் செய்யும். ஆணாதிக்கவாதியா இல்லை பிற்போக்குவாதியா இப்படி எரியக் காரணம் என்ன. பேப்பர் கட்டிங் தலைப்பை மட்டும் படிக்கும் நபர்கள் முழுவதும் படித்தால் நல்லது.
மூன்று திருமணம் செய்து அதுவும் மனைவி உயிரோடு இருக்கும் போது திருமணம் செய்து பித்தலாட்டம் பண்ணியது பெரும் பாட்டன் கி.ஆ.பெ விசுவநாதம் தானே தவிர பெரியார் அல்ல. ஒழுங்கான முறையில் பெரியார் திருமணம் செய்து கொண்டார் . இந்த செய்தியை பதிவிட்டவர்கள் அப்படியே கண்ணாடியை பார்த்து கொண்டே கி.ஆ.பெ வை கேட்டால் நல்லது




Comments
Post a Comment