இந்தி எதிர்ப்பும் ம.பொ.சி யும்

 இந்தி எதிர்ப்புக்கு ஈ.வெ.ரா. தலைவர் 


1938 இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்த போது சீமானின் பாட்டன் ம.பொ.சி அவர்கள் முதல்வர் இராஜாஜிக்கு ஆதரவாக நடந்து கொண்டார், கட்டாய இந்தி எதிர்ப்பை சமாளிக்கும் பிரச்சாரப் போருக்கு சென்னை நகர காங்கிரசாரை தயாரிக்க வேண்டிய பொறுப்பாளராக இருந்தார் ம.பொ.சி.

வெறும் மொழிப் போராட்டமாக இருந்த இந்தி எதிர்ப்பு எப்படி பெரியார் தலைவராக ஆன பிறகு வடிவம் பெற்றது என்பதை தன்னுடைய எனது போராட்டம் நூலில் தெரிவிக்கிறார்

சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் செயலாளன் முதல் சர்க்கிள் (வடசென்னை) காங்கிரஸ் கமிட்டியின் தலை வன் என்ற முறையில் கட்டாய இந்தி எதிர்ப்பைச் சமாளிக்கும் பிரச்சாரப் போருக்குச் சென்னை நகர காங்கிரசாரைத் தயாரிக்க வேண்டிய பொறுப்பு என் மீது சுமந்தது.

மொழிப் பிரச்சினையாக மட்டும் மறைமலையடிகளாலும், நாவலர் சோமசுந்தர பாரதியாராலும் தொடங்கப்பட்ட இந்தி

எதிர்ப்பானது நாளடைவில் அரசியல் ரீதியான காங்கிரஸ் எதிர்ப்பாகவும், வகுப்புவாத ரீதியான பிராமண எதிர்ப்பாகவும் மாறி, பெரியார் ஈ.வெ.ரா. வின் தலைமையைப் பெற்றுவிட்டது. 

முதலில் சென்னை நகரில் மட்டுமே தொடங்கிய இந்தி எதிர்ப்பு சில வாரங்களுக்குள் காட்டுத் தீ போல தமிழ்நாடு முழுவதிலும் பரவி, காங்கிரசை பயமுறுத்துமளவுக்கு வளர்ந்து விட்டது.

பெரியார் தலைவரான பின்னர் தான் போராட்டம் வலிமையடைந்தது என்று அன்று பெரியாருக்கு எதிராக இருந்த ம.பொ.சி வாக்குமூலம் கொடுத்துள்ளார்

#இந்திஎதிர்ப்பு #பெரியார்



Comments

Popular posts from this blog

நீதிக்கட்சி ஆட்சி சாதனைகள்

ஆதித்தனின் அழிவு மனப்பான்மை

வே.ஆணைமுத்து அவர்களின் விமர்சன புத்தகம்