Posts

ஆதித்தனின் அழிவு மனப்பான்மை

Image
பார்ப்பனர்களை தமிழன் என்று சொல்லியும் மலையாளிகள்,தெலுங்கர்களை வேற்று ஆட்கள், பெரியார் தமிழர் இல்லை என்றும்  சொல்லித் திரிந்த நாம் தமிழர் இயக்க தலைவர் ஆதித்தனாரை தமிழ்நாட்டை விட்டு விரட்ட வேண்டும் ஆதித்தனாரின் அழிவு மனப்பான்மை இது  என்று 1959 -ல் தனது குயில் இதழில் கண்டித்தார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

பெரியார் பிலாசபி ஏஜிகே கஸ்தூரி ரெங்கன்

Image
பெரியார் பிலாசபி  திராவிட விவசாய தொழிலாளர் சங்கம் தஞ்சை கீழ் வெண்மணியில் பெரியாரின் திராவிட விவசாய தொழிலாளர் சங்கத்தில் தீவிரமாக செயல்பட்ட ஐயா ஏஜிகே பெரியார் பற்றி குறிப்பிடுகின்றார்.. வெறும் கூலி, வயிற்றுப்பாடு என்கிற ஒரு வட்டத்திலிருந்து மாறி, உரிமைப் பிரச்சினைகள், கல்விப் பிரச்சினைகள், வேலை வாய்ப்புப் பிரச்சினைகள், ஆண்-பெண் சமத்துவச் சிந்தனை, பிறவியில் உயர்வு-தாழ்வு என்கிற வருணாசிரமச் சிக்கல்கள் இவற்றிலும் சிந்தனைகள் கிளர்ந்து எழும் காலகட்டத்தில், தந்தை பெரியார் பிலாசஃபியைத் தாங்கி நிற்கும் திராவிடர் கழகம் கொழு கொம்பாக நின்றுதானே தீரும் 🔥 #கீழ்வெண்மணி #பெரியார்

தமிழர் கழகம் பாரதிதாசன்

Image
  பெரியார் மட்டும் அல்ல தமிழ்ப் பெரும் பாட்டன் பாரதிதாசனும் தமிழர் கழகம், கி.ஆ.பெ , மா.பொ.சியை அதே வருடத்தில் கண்டித்தார். அவர்கள் செய்யும் சூழ்ச்சிக்காக ஆரியத்திற்கு அடிமையாய் போனதற்காக. திராவிட நாடு வேண்டும் என்று பாரதிதாசனும் கூறினார்.  பெரியார் இதை 11.04.1947 ல் விடுதலையில் குறிப்பிட்டதற்கு காரணம்  அன்று திராவிட நாடு பிரிவினையை பெரியார் கேட்டார் ஆனால் ஆரியத்திற்கு அடிமையாய் போன கி.ஆ.பெ , மா.பொ.சி போன்றவர்கள் அதை எதிர்த்தனர்.இவர்கள் சூழ்ச்சி செய்து திரும்பவும் டெல்லிக்கு அடிமையாக்க பார்க்கின்றனர் என்று அவர்களின் சூழ்ச்சிக்காக இதை கூறினார். பாரதிதாசனும் அவர்களின் கயமைத்தனத்தை எதிர்த்து திராவிட நாடு வேண்டும் அது தான் சரி என்று கூறினார். தமிழ், தெலுங்கு மக்களை தனியாக பிரிக்கும் காரியத்தை இவர்கள் செய்கின்றனர் என்று தனது குயில் இதழில் கண்டித்தார் . திராவிட நாடு வேண்டும் என்று கேட்டார்

தமிழ் எழுத்து சீர்திருத்தம் பெரியார்

Image
பெரியார் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம். தமிழ்நாடு அரசு ஆணை. பொது (செய்தி, மக்கள் -தொடர்புத்துறை) செய்தி வெளியீடு எண் -449.  நாள் 19.10.1978 பெரியார் ஈ.வெ. இராமசாமி அவர்கள் மேற்கொண்ட தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைத் தமிழக அரசு ஏற்று, அதனை நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பித்துள்ளது. (அரசாணை நிலை எண் 1875 19-10-1978) “தாய் பகை குட்டி உறவு” தாயுடன் பகையாம் ஆனால் குட்டியுடன் உறவாம் மானங்கெட்ட பெ.மணியரசன் கூறுகிறார் குடிஅரசில் எழுத்து சீர்திருத்தம் கொண்டு வந்தது குத்தூசி குருசாமி என்ற ஒரு பட்டுக்கோட்டை தமிழனாம்   நாக்பூர் ஊதுகுழல் தமிழ் இந்து பெ.மணியரசன் உளறல் இது  பெரியார் இல்லாமல் குத்தூசி இல்லை தஞ்சையில் பெரியார் பேச்சை கேட்டு  விட்டு நாத்திக சுயமரியாதை கொள்கையில் பெரியாருடன் கலந்து ஒரு இளைஞனாக அவர் பெரியாரை சந்தித்தார்  நீ நன்றாக படித்திருக்கிறாய் என்ன வேலை செய்கிறாய் ?? நான் வேலை தருகிறேன் சரி வா என்னுடன் ஈரோட்டுக்கு வந்து விடு என்று அவரை அழைத்து வந்து குடிஅரசில் தன்னுடன் ஒரு ஆசிரியராக அமர்த்திக் கொள்கிறார் பெரியார் அன்று முதல் குருசாமி பெரியாரின் குடும்பத்தில் ஒருவர்...

வே.ஆணைமுத்து அவர்களின் விமர்சன புத்தகம்

Image
தந்தை பெரியார் மறைவுக்குப் பின் திராவிடர் கழகம் என்ற புத்தகத்தை எங்கையோ வாங்கி படித்து அதில் உள்ளதை வாந்தி எடுத்துக் கொண்டு உள்ளனர் சிலர்  இந்த புத்தகம் முழுவதும் திராவிடர் கழகம், அன்னை மணியம்மையார் இவர்களின் மேல் ஆனைமுத்துவுக்கு  உள்ள வெறுப்பு ,  ஆற்றாமையை  மட்டுமே வெளிப்படுத்தும். ஆனைமுத்து அவர்களும் பாரதிதாசன் போலத் தான் பெரியாரை இருவரும் நேசித்தார்கள் ஆனால் திராவிடர் கழகத்தின் இயக்க ஆட்களை நேசிக்கவில்லை.  ஆனைமுத்து திராவிடர் கழகத்தில் இருந்து நீக்கப்பட்டதே இவ்வாறு பெரியார் மறைவுக்குப் பின் திராவிடர் கழகத்தின் போக்குகளை விமர்சித்து மத்திய குழு உறுப்பினர்களுக்கு அச்சிட்ட அறிக்கைகளை அனுப்பியதற்காகத் தான்.  இது சிலருக்கு தெரியுமா ? என்பது கூடத் தெரியவில்லை. திராவிடர் கழகம் மணியம்மையார் காலத்தில் தான் பெரியார் காலத்தை விட சிறந்து விளங்கியது என்பதை மா.பொ.சி யே கூறுகிறார். மணியம்மையை அன்னை என்று பாவேந்தர் பாரதிதாசன் போற்றி புகழ்ந்தார் . எம்.ஜி.ஆர் கூட தியாகம் செய்தவர் மணியம்மையார் என்று புகழ்ந்தார்.

கி.ஆ.பெ விசுவநாதம் திருமனம்

Image
பெண்களுக்கு தனது கணவனை தேர்ந்தெடுக்கும் உரிமை கிடைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அந்த உரிமை கிடைக்கும் வரை திருமணத்தை தடை செய்ய வேண்டும் -பெரியார் . இது தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டில் ஒரு திருமணத்திற்கு தலைமை தாங்கி பேசும் போது பெரியார் பேசியது.‌ இதன் தலைப்பு அப்படி கொடுக்கப்பட்டிருக்கிறது . ஆனால் பெரியார் பேசியது  என்னவென்றால் சுயமரியாதை திருமணத்திற்கு அனுமதி தராத அரசுகள் இருந்த காலத்தில் இருந்து இன்று சுயமரியாதை திருமணத்திற்கு அனுமதி அளிக்கும் காலம் வந்துள்ளது, இது மிகப்பெரிய மாற்றம். பெண்களுடைய அடிமைத் தனம் ஒழிய வேண்டும். ஆணுக்கு அடங்கி ஒடுங்கி நடக்கும் போக்கு ஒழிய வேண்டும்.  பெண்கள் ஆண்களுக்கு நிகராக தங்களது கணவனை தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற வேண்டும். அப்படி பெண்கள் முன் வரத் தயங்குவார்களானால் ஒரு நல்ல அரசாங்கமாக இருந்தால் அந்த சுதந்திரம் கிடைக்கும் வரை திருமணம் சட்டப்படி குற்றமாக்க வேண்டும் என்று கூறினார். இதில் என்ன தவறு உள்ளது.  ஆணாதிக்கவாதிகளுக்கு, பிற்போக்குவாதிகளுக்கு மட்டும் தான் இந்த பேச்சு எரியச் செய்யும். ஆணாதிக்கவாதியா இல்லை பிற்போக்குவாதியா இப்படி எர...

நீதிக்கட்சி ஆட்சி சாதனைகள்

Image
வரலாற்று திரிபுவாதி பெ . மணியரசன் அரசியல் வரலாற்றை தனக்கு ஏற்றவாறு சாதகமாக நறுக்கி வெட்டி ஒட்டுவதில் பிதாமகன் பெ . மணியரசன்   பெரியாரின் இட ஒதுக்கீட்டு பங்களிப்பு குறித்து தமிழர் கண்ணோட்டத்தில் ஒரு கட்டுரையில் மணியரசன் எழுதி இருக்கும் சில பொய்களுக்கு மறுப்பு , அந்த கட்டுரையில் முழுக்க முழுக்க தந்தை பெரியாரை சிறுமைப்படுத்த மணியரசன் பல பல பொய்களை கூறி இருக்கிறார் அதை என்னால் முடிந்த வரை இதில் உடைத்து இருக்கிறேன்   பெரியார் 1919 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்றும் திராவிடத்தின் பிதாமகன் பெரியார் பார்பனிய பணியா கட்சியான காங்கிரஸ் கட்சியில் தானே சேர்ந்தார் என்கிறார் தோழர் பெ . மணியரசன் அது தவறு என்பது நம் கருத்து   பெ . மணியரசன் இளம் வயதில் திமுகவில் இருந்தார் பிறகு அவர் கம்யூனிஸ்ட் & மார்க்சியவாதியானார் இன்று அவர் தமிழ்தேசியவாதியாக அறியப்படுகிறார் , இருந்தாலும் காலம் பல மாறுதலான அரசியல் திசை நோக்கி இழுக்கும் அதில் இவரும் விதிவிலக்கு அல்ல தந்தை பெரியாரும் விதிவிலக்கு ...